சினிமா

"தொலைக்காட்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில், நடிகர்கள் இலவசமாக கலந்து கொள்ளக் கூடாது" - நடிகர் சங்கம்

பணம் தராமல் நடத்தப்படும் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்க வேண்டாம் என நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தந்தி டிவி

தொலைக்காட்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில், இலவசமாகவோ அல்லது மரியாதைக்காகவோ நடிகர்கள் கலந்து கொள்ளக் கூடாது என நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர்கள், தாங்களோ அல்லது நடிகர் சங்க அறக்கட்டளையோ பயன்பெறும் வகையில் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பணம் வழங்கப்படாத போதிலும், ஹைதராபாத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சில நடிகர்கள் பங்கேற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இது போன்ற செயல்களை தவிர்த்து, நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த விழாவினை புறக்கணித்த நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

"தொலைக்காட்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில், நடிகர்கள் இலவசமாக கலந்து கொள்ளக் கூடாது"

"தாங்களோ அல்லது நடிகர் சங்க அறக்கட்டளையோ பயன்பெறும் வகையில் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்"

"பணம் வழங்கப்படாத போதிலும், ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சில நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்"

"எதிர்காலத்தில் இது போன்ற செயல்களை தவிர்த்து, நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்"

விருது விழாவை புறக்கணித்த விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி - நடிகர் சங்கம்

TN Govt | TVK | ஸ்பாட் Fix செய்த CM விஜய்..! தமிழகத்துக்கே பிரேக்கிங் நியூஸ்..

By Election | CM Vijay | இடைத்தேர்தல்.. தயாரான தலைகள்.. யார் பக்கம் கையை நீட்டுவார் CM விஜய்..?

BREAKING || பிளானோடு என்ட்ரி கொடுத்த திருமா..வாசல் வந்து வரவேற்ற அமைச்சர் ஆனந்த்

Breaking | TVK Alliance Meet | தொடங்கியது தவெக கூட்டணி மீட்டிங் | யார் யார் உள்ளே?

TVK | CM Vijay | நாடே காத்திருக்கும்; CM விஜய்யின் முடிவு..? ஸ்தம்பித்து நிற்கும் பனையூர்