நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கியவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். இந்த நிலையில், மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பது குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.