சினிமா

"எனது வீடு இடிக்கப்பட்டது போல், உங்களது ஆணவமும் அழியும்" - நடிகை கங்கனா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மகாராஷ்ட்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

மகாராஷ்ட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடும் எதிர்ப்பு

"காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்"

நடிகை கங்கனா ரணாவத், வெளியிட்ட வீடியோ

கங்கனா ரனாவத் வீட்டில் சட்டவிரோதமான கட்டுமானங்கள்...

இடித்து தள்ளியது மும்பை மாநகராட்சி

அரசியல் பாதைக்கான அடித்தளமா?

மராட்டிய முதல்வருக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா...

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மகாராஷ்ட்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலை அவரை அரசியலில் ஈடுபட தூண்டுமா என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை, பாலிவுட்டில், நெப்போட்டிசம் , போதை பொருள் கடத்தல், என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு கருத்துக்களை அள்ளி தெளித்து வந்தார் நடிகை கங்கனா ரணாவத்.மனதில் பட்டதை, மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்தும், சுபாவம் கொண்ட நடிகை கங்கனாவின், பேச்சுக்கள் அவரை அரசியல் பயணத்திற்கு இட்டு செல்லுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையை, நடிகை கங்கனா ரணாவத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.இதனிடையே மும்பை பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. அதனை தொடர்ந்து, புதன்கிழமையன்று கங்கனாவின் பங்களாவில் ஒரு பகுதியை, இடித்து தள்ளினர் மாநகாராட்சி அதிகாரிகள்...

இதனிடையே, இமாச்சல பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் மும்பை வந்தார் நடிகை கங்கனா ரணாவத். அவருக்கு எதிராக, மும்பை விமானநிலையத்தில், சிவசேனாவின் ஆதரவாளர்களான, பாரதீய காம்கர் சேனா அமைப்பினர், கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.முன்னதாக, கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மாநகராட்சி இடிக்க இடைக்கால தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கங்கனாவின் மனுவுக்கு மும்பை மாநகராட்சி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.எதிர்ப்பை மீறி மும்பை வந்த நடிகை கங்கனா ரணாவத், மகாராஷ்ட்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு, எதிராக பகிரங்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரைப்பட மாஃபியாக்களை வைத்து எனது வீட்டை இடித்து தள்ளினீர்கள்...

எனது வீடு இடிந்தது போல், உத்தவ், உங்களது ஆணவமும் ஒருநாள் இடியும்

அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. இப்போது நான் உண்மையாகவே காஷ்மீரின் பண்டிட்களின், நிலையை போல் உணர்கிறேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், சுயசரிதையை விளக்கும் திரைப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின், டீசர் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது. ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரணாவத் மாநில முதல்வரை எதிர்த்து வீடியோ வெளியிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை கங்கனாவின் இந்த போக்கு அவரை அரசியல் பயணத்திற்கு இட்டு செல்லுமோ என்ற சந்தேகத்தையும் அனைவரது மனதிலும் கிளப்பியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி