உலக நாயகன் கமலின் அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுக்கு மறுபதிவிட்ட கமல்ஹாசன், தலைவன் இருக்கிறான் படத்தின் அணியை வலுப்படுத்தியிருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்புக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். தெனாலி படத்திற்கு பின், 19 ஆண்டுகளுக்கு பிறகு கமல் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி சேர்ந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.