#jailer2 #rajinikanth #Cuddalore
திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட `ஜெயிலர் 2’ - கொதித்து போன ரசிகர்கள்... தியேட்டரில் பரபரப்பு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜெய்லர் 2 திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நின்றதால் திரையரங்கிற்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்குகளிலும் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு காட்சி முடிந்தவுடன் இரண்டாவதாக 12 மணி காட்சி பொதுமக்கள் ரசிகர்கள் பார்க்க வந்தனர். இந்த நிலையில் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தடைப்பட்டது. சுமார் அரை மணி நேரம் படம் தடையான நிலையில், திரையரங்கில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். பின்னர் மீண்டும் படம் துவங்கிய நிலையில் மீண்டும் திரைப்படம் ஓடாமல் தடைப்பட்டு நின்றது, இதனால் திரையரங்கிற்குள் இருந்த ரசிகர்கள் கோபமடைந்து திரையரங்கு வெளியே வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெயிலர் படம் திடீரென தடைபட்டதால் ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தும் திரையரங்கிற்குள் கூட்டலிட்டதால் திரையரங்கு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.