சினிமா

நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது. காசி நகரின் பிண்ணனியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும் ஹன்சிகா, புகைப்பிடிப்பது போன்ற காட்சி அதில், இடம் பெற்று இருந்தது. இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் நாராயணன் புகார் அளித்திருந்தார். மேலும் இயக்குனர் ஜமீல் மற்றும் நடிகை ஹன்சிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நாரயணன் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

ADMK | EPS | Edappadi Palaniswamy | தொண்டர்களை பார்த்து ஈபிஎஸ் கேட்ட கேள்வி - உடனே வந்த REACTION

Nallakannu | CM Stalin | DMK | மறைந்த நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

CPI | Nallakannu Death | ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

CPI | Nallakannu Death | Chennai | செங்கொடி சூழ... கொண்டுசெல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

Nallakannu | ``தோழமையின் தூண் சாய்ந்து விட்டது..'' | கனத்த இதயத்துடன் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர்