சினிமா

"ரத்தமாரே.. ரத்தமாரே.." - தனுஷ் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் கோலிவுட்

தந்தி டிவி

கோலிவுட்டில் தனக்கென ஒரு ஸ்டைலுடன் வலம் வரும் நடிகர் தனுஷ், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்வதில் கைதேர்ந்தவர்...

நடிப்பை தாண்டி அவரின் தனித்துவமான கலை அறிவும் சினிமா துறையில் அவருக்கு விருதுகளை தேடித் தருகிறது..

ப.பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமாகி வரவேற்பை பெற்ற அவர் இப்போது ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார் தனுஷ்....மற்றொரு புறம் பாடகராகவும் ரசிகர்களை ஈர்க்க தவறியதில்லை..

மெலடி முதல் குத்து பாடல்கள் வரை பாடி தனது குரலால் கிறங்கடித்த தனுஷ், பாடல் வரிகளை எழுதியும் மெய் மறக்க செய்துள்ளார்..

3 , வேலையில்லா பட்டதாரி, தங்கமகன், மாரி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் அடித்த பாடல்கள் எல்லாம் Poetu தனுஷின் கைவண்ணம் தான்.....

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பிசியாக இருக்கும் தனுஷை போலவே, உருவெடுத்துள்ளார் அவரின் மகன் யாத்ரா...

ஆம், தந்தையை போலவே, பாடலாசிரியராக புது அவதாரம் எடுத்துள்ளார் யாத்ரா...

அதிலும் அவரின் தந்தை தனுஷ் இயக்கும் 3வது படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலேயே தனது முதல் பாடலை எழுதியுள்ளார்..

கோல்டன் ஸ்பாரோ என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலுக்கு பிரியங்கா மோகன் நடனமாடியுள்ள நிலையில், அதனை எழுதியதே தனுஷின் மகன் யாத்ரா தான் என எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா..

இதனை கண்டு பூரித்து போன தனுஷ் ரசிகர்கள், பாடலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தனுஷ் தனது மகனை ஹீரோவாகவே அறிமுகப்படுத்துவார் என ரசிகர்கள் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர். காரணம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் அவரின் சகோதரி மகனான பவிஷ் என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருந்தார்...

இதற்கு முன்னதாக ராயன் திரைப்படத்தில் தனது சகோதரி கார்த்திகா தேவியின் கணவரும் இருதய நிபுணருமான கார்த்திக் ஆஞ்சநேயன்-ஐ நடிகராக களமிறக்கியிருந்தார் நடிகர் தனுஷ்...

இப்படி தனது குடும்பத்தினரை கலைத்துறையில் களமிறக்கி வரும் தனுஷ், தனது மகனையும் பாடலாசிரியராக என்ட்ரி கொடுக்க வைத்து தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்...

விரைவில் கோல்டன் ஸ்பாரோ பாடல் வெளியாகும் நிலையில், தந்தைக்கு டஃப் கொடுப்பாரா யாத்ரா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்...

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்