சர்வதேச கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நடைபயண நிகழ்ச்சியில் 500 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரசாந்த், நம் குடும்பத்திற்காக ஒவ்வொருவரும் உடல்நலத்தை பேணுவது அவசியம் என தெரிவித்தார். உடற்பயிற்சி, நல்ல உணவு ஆகியவையே ஆரோக்கியத்தை கொடுக்கும் எனவும் நடிகர் பிரசாந்த் கூறினார்.