சினிமா

அண்ணாத்த... வலிமை... மாநாடு...? - தீபாவளிக்கு தியேட்டர்களில் மும்முனைப் போட்டி?

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

தந்தி டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின், படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், வருகிற தீபாவளியன்று மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தீபாவளிக்கு நடிகர் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தீபாவளிக்கு திரையரங்குகளில் மும்முனைப் போட்டி ஏற்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்