சினிமாவை விட்டு விலகுகிறாரா அஜித்? நடிகர் அஜித்குமாரின் Ajith Redant Racing அணி, 2026 மற்றும் 2026–27 சீசனுக்கான சர்வதேச கார் ரேசிங் அட்டவணையை அறிவித்துள்ளது. இந்த சீசனில் Creventic European Series, Michelin Le Mans Cup, Asian Le Mans Series உள்ளிட்ட போட்டிகளில் இந்த அணி பங்கேற்கிறது. இந்த போட்டிகள் மார்ச் 2026 முதல் ஜனவரி 2027 வரை ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஐக்கிய அரசு அமீரகம் மற்றும் மலேசியா போன்ற பல நாடுகளில் நடைபெற உள்ளன. இதனால், நடிகர் அஜித்குமார் நடிக்கும் AK64 திரைப்படத்தின் படப்பிடிப்பு கார் பந்தயங்கள் இல்லாத காலத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கொஞ்சம் கொஞ்சமாக அஜித்குமார் திரைத்துறையில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் சோகத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.