தமிழகத்தின் லேடி பிரபுதேவா என்று அழைக்கப்படும் நடிகை சாய்ஷா வனமகன் படத்தில் அறிமுகம் ஆனவர். இந்த வருடம் கார்த்தியுடன் நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியுடன் நடித்த ஜூங்கா திரைப்படம் அடுத்த வாரம் வெளிவருகிறது. அதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் நடித்த கஜினிகாந்த் திரைப்படம் வெளிவர இருக்கிறது. அடுத்தடுத்த படங்கள் வெளியாவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சாயிஷா.
நடனத்தில் சிறப்பாக திகழும் நடிகர்கள், தனது கனவு இயக்குனர்கள் மற்றும் தான் நடித்த படத்தின் அனுபவங்களை பற்றி நிறைய விஷயங்களை பேசி உள்ளார்.