விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஆசிரியர் விவேக் எழுதிய இந்த பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. யூ-டியூப் வலைதளத்தில் மட்டும் இந்த பாடலை127 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.