நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது முன்னாள் காதலி ஷனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியில் ஏற்பட்ட கார் பார்க்கிங் தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். இது குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, ஒரு சின்ன விஷயத்தில் சட்டம் இவ்வளவு துரிதமாக செயல்படுமா? எனக் கேள்வியெழுப்பினார். மேலும், இருதரப்பு கருத்துகளும் எதிர்மறையாக உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.