திரையரங்கில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் 3 ஆண்டு சிறை என்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.எஸ்.டி. குறைப்பு, திரைப்படத் தயாரிப்புக்கு சாதகமான SINGLE WINDOW SYSTEM ஆகியவற்றை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.