BREAKING

BREAKING || தேனி சிறையில் நடந்தது என்ன? ஒரே இடத்தில் 13 கைதிகள்... தொடங்கிய கிடுக்கிப்பிடி விசாரணை

தேனி சிறையில் நடந்தது என்ன? ஒரே இடத்தில் 13 கைதிகள்... தொடங்கிய கிடுக்கிப்பிடி விசாரணை

thanthitv

#Theni #PrisonersEscape #TNPolice

BREAKING || தேனி சிறையில் நடந்தது என்ன? ஒரே இடத்தில் 13 கைதிகள்... தொடங்கிய கிடுக்கிப்பிடி விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

BREAKING || அடுத்த அதிர்ச்சி... 3 பள்ளி சிறுமிகள் மாயம் - பெரும் பரபரப்பு

BREAKING || மேகதாது அணை... கர்நாடகாவின் மூவ்... மத்திய அரசு கொடுத்த விளக்கம்

TNEB | வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்யும் EB?

Gem Veeramani | தோண்ட தோண்ட திகில்.. ஜெம் வீரமணி மேலும் 2 வழக்குகளில் கைது

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம்.. நடுப்பட்டு கிராமத்தில் விசாரணை