BREAKING

#BREAKING || Gas Cylinder Shortage | அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள்

அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள்

thanthitv

#BREAKING || Gas Cylinder Shortage | அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள் #cylinderprice #gascylindershortage #thanthitv சிலிண்டர் தட்டுப்பாடு: தென் மாவட்டங்களில் அதிரடி சோதனை – 17 சிலிண்டர்கள் பறிமுதல்! நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து தென் மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வுத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. விருதுநகர் சரகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளில் வீட்டு பயன்பாட்டுக்கான 6 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 11 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டு சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Congress | தோல்விக்கு காரணம் என்ன? - விசாரணையில் இறங்கிய காங்கிரஸ்

Ajithkumar | நடிகர் அஜித் தாயார் மறைவு "தாங்கி கொள்ள முடியாத இழப்பு.." - அரசியல் தலைவர்கள் இரங்கல்

Alangulam Issue| நெல்லை, தென்காசி அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சைக்கோ கும்பல் இதான்

Ajith Mother Death | துபாயில் இருந்து இன்னும் வராத அஜித் - தாயாருக்கு எப்போது இறுதிச்சடங்கு?

தென்காசி அரிவாள் வெட்டு சம்பவத்தில் பேரதிர்ச்சி திருப்பம் - அது சைக்கோ கும்பலா..குலைநடுக்க தகவல்