BREAKING

Weather Update | உருவானது புதிய சிஸ்டம்.. அடுத்த 48 மணி நேரத்தில்.. அலர்ட் கொடுத்த வானிலை

உருவானது புதிய சிஸ்டம்.. அடுத்த 48 மணி நேரத்தில்.. அலர்ட் கொடுத்த வானிலை

thanthitv

#WeatherUpdate #RainAlert #TNRains #RainUpdate #WeatherReport #HeavyRain #AndamanAndNicobarIsland #IMD #ThanthiTV

Weather Update | உருவானது புதிய சிஸ்டம்.. அடுத்த 48 மணி நேரத்தில்.. அலர்ட் கொடுத்த வானிலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் இந்த வானிலை அமைப்பு மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raid | KN நேரு வீட்டில் ரெய்டு நடத்தி கொண்டிருக்கும் போதே.. அதிரும் காட்பாடி.. குவியும் திமுகவினர்

KN Nehru Raid| எதிர்பாரா ட்விஸ்ட்டாக கோவையிலும்.. அதிரும் சிங்காநல்லூர்

Theni Prisoners Escape `லிங்காவின் வியூகம்’ - 17 கைதிகள் தப்பியதற்கு பின் திடுக்கிடும் ப்ளான்

CM Vijay Meeting | TN Ministers | `புதிய திட்டங்கள்' - CM விஜய் தலைமையில் கூடும் அமைச்சர்கள்

#BREAKING || Chennai | TN Govt | அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு