#MKStalin #Kallakurichi #TVKMLA #CollectorIssue #ThanthiTV MK Stalin | Kallakurichi Issue | பூதாகரமான ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மு.க.ஸ்டாலின் அதிரடி பதிவு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் ஒழுங்கீனச் செயல் குறித்து ஆட்சியர் புகார். இதுதொடர்பான செய்தி 'தி இந்து' நாளிதழில் வெளியாகியுள்ளதாக ஸ்டாலின் பதிவு. சம்பவம் வெளியானபோதே முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆட்சியரிடம் பேசியிருக்க வேண்டும். ஆட்சியருக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த எம்.எல்.ஏ.வைக் கண்டித்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என வலியுறுத்தல். சம்பவத்தை மறைக்க அரசு முயன்றதால்தான் புகார் அளிக்கத் தாமதமானதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் பெண்களின் பாதுகாப்பு எப்படி எனக் கேள்வி. பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகப் பேசிய கட்சித் தலைவர்களுக்கு கண்டனம். அரசின் கவனத்திற்கு வந்தும் நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்தில் பொய் சொல்வதாகக் குற்றச்சாட்டு. குற்றச்சாட்டுகள் தொடர்பாக கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ.வைக் கைது செய்து விசாரிக்க வலியுறுத்தல். பாலியல் குற்றம், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை தொடர்பாக த.வெ.க.வினர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு