#seeman | #tvk | #NTK BREAKING ||
"வட்டி கட்டவே கடன் வாங்கணும்.. இது தேவையா?" - தமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.