Breaking | Keralam | Flood | கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழை | உயரும் பலி எண்ணிக்கை
#keralam #flood #heavyrain #landslide #thanthitv
கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழை - ஒரே நாளில் 9 பேர் பலி கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5 பேர் உயிரிழப்பு நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி– 2 பேர் மாயம் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 பேர் மாயமாய் உள்ளனர் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே, கொட்டப்புழா ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். மலப்புரம் மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மாயமாகியுள்ளனர். வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 பேர் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் வட்டவடா கோட்டக்கம்பூரில், விவசாய நிலத்தில் மழைக்கு ஒதுங்கியிருந்த குடும்பத்தினர் மீது திடீரென மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சின்னு உயிரிழந்தனர். பாலகிருஷ்ணனின் மனைவி மரியம்மா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோட்டயம் மாவட்டத்திலும் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தேக்கோய் அருகே நிலச்சரிவில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 35 வயது பெண் சங்கீதா உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் பூஞ்சார் பகுதியில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் 80 வயது முதியவர் ஜோசப் உயிரிழந்தார். இதனிடையே, கேரளாவில் அடுத்த சில நாட்களிலும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை மணிக்கு ஒருமுறை கண்காணிக்க அதிகாரிகளுக்கு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார். ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் உடனடியாக வெளியேற்றவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. *கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது