BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு இத்திருக்கோயிலின் கிரிபிரகாரப் பகுதிகள், முறைவரிசைப் பகுதிகள், காத்திருப்போர் அறைப் பகுதிகள் ஆகியவற்றில் பக்தர்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக விற்பனை செய்யும் தலைச்சுமை வியாபாரிகள் மற்றும் கிரிப்பிரகார நடைபாகைகளில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ள வியாபாரிகள் ஆகியோரை, திருக்கோயில் கிரிப்பிரகாரப் பகுதிகளில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத மாற்றிடத்திற்குச் சென்று. அவர்கள் வியாபாரம் செய்வதற்குத் தெரிவித்து, அவர்களாகவே வெளியேறிச் செல்ல ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து, காவல்துறையினர் முன்னிலையில் அறிவிக்கை செய்யும் நிகழ்வு மட்டுமே நேற்றைய தினம் (15.06.2026) முற்பகலில் இத்திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. சிறுவியாபாரிகளின் வியாபாரத்தைத் தடுக்கவோ அல்லது முடக்கவோ இல்லை என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.