BREAKING

Breaking | Puzhal Jail | அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் | ஹைஅலர்ட்டில் புழல் மத்திய சிறை

அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் | ஹைஅலர்ட்டில் புழல் மத்திய சிறை

thanthitv

Breaking | Puzhal Jail | அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் | ஹைஅலர்ட்டில் புழல் மத்திய சிறை

#puzhaljail #jailbreak #TNpolice #thanthitv

புழல் மத்திய சிறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு புழல் மத்திய சிறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் தீவிர கண்காணிப்பு புழல், தேனி சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் எதிரொலி புழல் சிறை கண்காணிப்பு கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு புழல், தேனி சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரம் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தீவிரம். அண்மையில் புழல் மத்திய சிறையில் இருந்து தண்டனை கைதி, விசாரணை கைதி என இருவர் இருந்து தப்பியோடினர். மேலும் தேனி மாவட்ட சிறையில் இருந்து சிறை காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு புழல், தேனி சிறைகளில் தப்பிய கைதிகள் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றாலோ அல்லது காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றாலோ, நிலைமையைக் கருத்தில் கொண்டு தப்பியோடும் கைதிகளை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க சிறை காவலர்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் புழல் மத்திய சிறையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறை வாயிலில் வழக்கம் போல துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கோபுரத்திலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

CM Vijay | Cabinet Meeting | CM விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு

Theni Jail | 17 கைதிகள் தப்பியோடிய அதே தேக்கம்பட்டி சிறையில் தலைகீழ் மாற்றம்

Anbil Mahesh Case | ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு - சரணடைந்த முத்துக்குமாருக்கு பரபரப்பு உத்தரவு

Breaking | Rahul Gandhi | டெல்லி பிளானை உடைத்த ராகுல்காந்தி | ஒன்றுகூடிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

Udhayanidhi | Puzhal Prison | Anbil Mahesh | திடீரென மீண்டும் புழல் சிறைக்கு வந்த உதயநிதி