தற்போதைய செய்திகள்

டிடிவி தினகரன் காளைக்கு விஜயபாஸ்கர் தந்த சிறப்பு பரிசு... புதுக்கோட்டையில் நடந்த சுவாரசியம்

தந்தி டிவி
• புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அம்மன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், டிடிவி தினகரன் பெயரில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் ஒன்று வெற்றி பெற்றது. • இதனை மேடையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சார்பில் சைக்கிளை அக்காளைக்கு பரிசாக வழங்கினார். அரசியலை கடந்து நடந்த இந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்