திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வீடியோ எடுப்பதை பார்த்த அந்த நபர் தனது பெல்ட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவரை மீண்டும் தாக்கினார்.
அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் பேருந்தில் ஏறிய ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறினார்.
தான் ராணுவத்தில் பணிபுரிந்து சஸ்பெண்ட் ஆனவர் என்றும் கேள்வி கேட்ட மேலதிகாரியின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னாள் ராணுவ வீரர் என்று கூறிக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.