வருகிற 10ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பெண்கள் டிக்கெட் வாங்க தனி வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல், மாற்றுத்திறனாளி ரசிகர்கள் டி.என்.சி.ஏ. அலுவலகத்தில் டிக்கெட்களை பெற்றுக்கொண்டனர். டிக்கெட் கவுண்டர்களில் முறையாக தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், கூட்ட நெரிசலின்றி டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இதனிடையே டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்ததாக ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், பெண்களுக்கு தனி கவுண்ட்டர் வைத்தது, பயனுள்ளதாக இருந்ததாக ரசிகைகள் கூறினர்.