தற்போதைய செய்திகள்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு போடப்பட்ட சாலை... சாலை அமைத்து மூன்றே நாள்களில் சேதம்... அதிருப்தி அடைந்த மக்கள்

தந்தி டிவி
• பொன்னேரியில் புதிதாக போடப்பட்ட சாலை மூன்றே நாள்களில் சேதமடைந்ததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். • திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தது. • இதனால் பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது. • இந்நிலையில் பொன்னேரியில் இருந்து ஆலடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. • மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. • ஆனால் போடப்பட்டு மூன்றே நாள்களில் சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். • இதனால் சேதமடைந்து காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்