தற்போதைய செய்திகள்

பரபரப்பான சாலையில் பணத்தை வாரி வாரி இறைத்த இளைஞர்! - இது படம் அல்ல நிஜம்!

தந்தி டிவி

பெங்களூர் மேம்பாலத்தில் இருந்து பணத்தை வாரி வாரி இறைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது...

கே ஆர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் இன்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்திவிட்டு தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து 10 ரூபாய் தொடங்கி 200 ரூபாய் நோட்டுகள் வரை, பணத்தை வாரி கீழே இறைத்தார்... வாகனங்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலை என்றும் பாராமல் பொதுமக்கள் ஒன்று கூடி பண நோட்டுகளைப் பிடிக்கத் திரண்டனர்... பணத்தை இறைத்த இளைஞர் யார்?... எதற்காக ரூபாய் நோட்டுகளை வீசினார்? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வீடியோவில் இடம்பெற்றிருந்த அந்த வள்ளலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்