தற்போதைய செய்திகள்

ஈரானை வீழ்த்தி கெத்து காட்டிய அமெரிக்கா.. அடுத்த சுற்றில் நெதர்லாந்து, செனகல்

உலக கோப்பை கால்பந்து தொடரில், குரூப் ஏ பிரிவில் உள்ள கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

தந்தி டிவி

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செனகல் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2க்கு1 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் செனகல் 3 போட்டிகளில் 2 வெற்றி ,1 தோல்வி என அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகளில் 2 வெற்றி,1 டிரா என நெதர்லாந்து அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரில், குரூப் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் பி பிரிவில் நள்ளிரவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஈரான் மற்றும் அமெரிக்கா அணிகள் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அமெரிக்கா 3 போட்டிகளில் 1 வெற்றி , 2 டிரா என அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்