தற்போதைய செய்திகள்

வெள்ளை மாளிகை உள்ளே புகுந்த ட்ரக்..! பைடனைக் கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி... பதற்றத்தில் அமெரிக்கா

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கொல்ல முயன்ற சாய் வர்ஷித் கண்டுலா என்ற 19 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்...

மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையின் Lafayette சதுக்கத்தில் பாதுகாப்புத் தடுப்புகளை ட்ரக்கைக் கொண்டு மோதியுள்ளார்... ட்ரக்கைத் தடுத்து நிறுத்திய அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள், வண்டியில் இருந்து நாசி ஸ்வஸ்திக் அடையாளத்துடன் இருக்கும் கொடியை எடுத்துள்ளனர். மேலும் வண்டியை ஓட்டி வந்த சாய் வர்ஷித் கண்டுலாவும் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர், துணை அதிபர், அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்ய முயற்சி, கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கண்டுலா எதிர்கொள்ள உள்ளார்... ட்ரக்கில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கண்டுலா விசாரணை அதிகாரிகளிடம், அரசாங்கத்தை கைப்பற்றி அதிபர் பைடனைக் கொல்ல விரும்பியதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது மனநலன் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து ஜோ பைடனிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ