தற்போதைய செய்திகள்

பரபரப்பை கிளப்பிய வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்... சேலம் கலெக்டர் விளக்கம்

தந்தி டிவி

பள்ளிக் கட்டடம் தொடர்பாக தனது வாட்ஸ் அப் எண்ணில் வைக்கப்பட்ட ஸ்டேட்டஸ், தவறுதலாக நிகழ்ந்திருக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியராக கார்மேகம் உள்ளார். இவர், நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை ஸ்டேட்டஸாக வாட்ஸ்-அப்பில் வைத்திருந்தார். அந்த செய்தியில் தாரமங்கலம் பகுதியில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் 6 மாதமாகியும் இன்னும் திறக்கப்படவில்லை என்றும், அமைச்சருக்காக காத்திருப்பதால் மாணவர்கள் இடநெருக்கடியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. சேலம் ஆட்சியரின் இந்த ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆட்சியர் கார்மேகம், தனக்கு ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கமே இல்லை என்றும், கை தவறி இது நிகழ்ந்திருக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியை முதல்வர் வருகையின்போதே திறந்துவிட்டோம் என்றும், கூறி உள்ளார்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்