தற்போதைய செய்திகள்

"மாடல் அழகி என்னை நிர்வாணப்படுத்தி மிரட்டினார்" - நபர் பரபரப்பு வீடியோ.. மீண்டும் சூடான 'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்

தந்தி டிவி

தணிந்து போன "தி கேரளா "தி கேரளா ஸ்டோரி" திரைப்பட பாணியில் மும்பை மாடல் அழகி ஒருவர் மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசில் பரபரப்பு புகாரளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கேரளாவை சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய மதத்துக்கு கட்டாய மாதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக கதைக்களம் கொண்ட "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சில மாநிலங்களில் வெளியிட தடையும் விதிக்கப்பட்டது..

இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகாரளிக்க, "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை பார்த்த பின்பு தான் தனக்கு தைரியம் ஏற்பட்டதென்று மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் போலீசில் புகாரளித்திருக்கிறார்...

கடந்த 2020 ஆம் ஆண்டு, 23 வயதான மும்பையை சேர்ந்த மாடலிங் அழகி ஒருவர், தன்வீர் அக்தர் லேக் என்பவர் நடத்தி வந்த மாடலிங் ஏஜென்சியில் சேர்ந்துள்ளார்...

தனது பெயரை யாஸ் எனக்கூறி பழக ஆரம்பித்த தன்வீர் அக்தர் லேக்குடன், மாடல் அழகிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது...

4 மாதங்களுக்கு பின்புதான் தன்வீர் அக்தர் லேக்கின் உண்மையான பெயரே, மாடலிங் அழகிக்கு தெரியவர, சிறிய தகராறு ஏற்பட்டு, பின்பு இருவரும் பழைய மாதிரி ஒன்றாக பழக ஆரம்பித்துள்ளனர்...

இதில், இருவருக்குமிடையே காதல் ஏற்பட, மாடல் அழகியை ராஞ்சிக்கு அழைத்து சென்ற தன்வீர் அக்தர் லேக், அவரை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்...

இதன்பின்பு அவரை, இஸ்லாமிய மதத்துக்கு மதம் மாறக் கூறி தன்வீர் அக்தர் லேக் கட்டாயப்படுத்தியதாகவும், இதற்கு மறுத்ததால், தன்னை அவர் பல முறை கொலை செய்ய முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் மாடல் அழகி ..

இதனிடையே தான், "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வெளியானது என்றும், அதை பார்த்த பிறகுதான் பல மாதங்களாக மன வேதனைக்குள்ளாகி இருந்த தனக்கு இந்த விவகாரம் குறித்து போலீசில் புகாரளிக்க தைரியம் வந்ததாக கூறி, மாடல் அழகி போலீசில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

மாடல் அழகி அளித்த புகாரின் அடிப்படையில் தன்வீர் அக்தர் லேக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்...

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு தன்வீர் அக்தர் லேக் விளக்கமளித்து வெளியிட்ட வீடியோ, இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க செய்தது....

வீடியோவில், மாடலிங் அழகி சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த தன்வீர் அக்தர் லேக், தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி தன்னை அவர் மிரட்டியதாகவும், இதெல்லாம் தன்னிடம் உள்ள சில டேட்டாக்களை களவாடும் நோக்கில் அவர் நடத்தும் நாடகம் என பதில் குற்றச்சாட்டு சுமத்தினார்....

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை