தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவிகளை ஆபாச படம்பிடித்த விவகாரம்.. கர்நாடகாவில் அதிரடி காட்டப்போகும் குஷ்பு

தந்தி டிவி

கர்நாடகாவில், கல்லூரி மாணவிகளை ஆபாச படம் பிடித்ததாக கூறப்படும் விவகாரத்தில், நேரில் சென்று விசாரிக்க உள்ளதாக, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கர்நாடக மாநிலம் உடுப்பி கல்லூரியில், உடன்பயிலும் மாணவிகளாலேயே, கழிவறையில் ஆபாச படம் பிடித்ததாக வெளியான செய்தி தொடர்பாக கல்லூரிக்கு நேரில் செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாணவிகள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் நேரில் சென்று, மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களின் ஒழுக்கத்தை கெடுக்கும் விதமாக யாரும் விளையாட கூடாது என்றும் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்