தற்போதைய செய்திகள்

தகாத உறவை தட்டிக் கேட்ட கணவன்...அடித்துக் கொன்ற கொடூர மனைவி...

தந்தி டிவி

செங்கல்பட்டு - ஆலத்தூர்

சொத்துக்களை சுருட்ட கொலை திட்டம்...

கணவருக்கு டிரம்மில் சமாதி கட்டிய மனைவி...

தகாத உறவை தட்டிக் கேட்ட கணவன்...

அடித்துக் கொன்ற கொடூர மனைவி...

ஒரு வயசுக்கு மேல, காலத்த ஓட்ட எல்லாருக்கும் ஒரு துணை தேவைப்படும், அப்படி தான் இங்க ஒருத்தர் தன்னோட மனைவிய நம்பியிருக்காரு... ஆனா அந்த உறவே கடைசியில அவரோட உயிருக்கு எமனா மாறியிருக்கு.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் குடியிப்புகளுக்கு மத்தியில் இருந்த ஒரு வீடு குடலை பிரட்டும் வாடையில் நாறி கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறாகள்...

நாயோ பூனையோ இறந்திருக்கும் என்று, கூடியிருந்த மக்கள் அடித்த வாடைக்கு மூக்கை மூடி காத்திருந்த நேரத்தில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டிய கிடந்த வீட்டுக்குள் நுழைந்து அலசி ஆராய்ந்திருக்கிறார்.

சந்தேகத்திற்குறிய வகையில் ஒரு பிளாஸ்டிக் டிரம் இருந்திருக்கிறது.

உடனே அதை திறந்த போலீசாருக்கும், திகிலோடு மூக்கை மூடி காத்திருந்த அந்த பகுதி மக்களுக்கும், அப்போதுதான் அடித்த வாடைக்கு விடை கிடைத்திருக்கிறது.

திறக்கப்பட்ட டிரம்முக்குள் இருந்தது பிளாஸ்டிக் கவரால் சுத்தப்பட்ட ஒரு ஆண் சடலம். 20 நாட்களுக்கு மேலாக சடலம் அந்த டிரம்மில் கிடந்ததால், ஊதி பெருத்து அழுகி கிடந்தது. போலீசாரால் அந்த சடலத்தை வெளியே எடுக்க முடியவில்லை. சடலத்தை டிரம்மோடு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி இருக்கிறார்கள்..

நடந்திருப்பது கொலை என்று முடிவு செய்த காவல்துறையினர், இறந்தவர் குறித்தும், அவரை கொலை செய்த கொலையாளி குறித்தும் துப்பு துளக்க விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் வளர்த்திகவுண்டம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணம்பாக்கத்தை சேர்ந்தவர். 15 வருடத்திற்கு முன்பு இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக எழிலரசி என்பவரை திருமணம் செய்திருக்கிறார் வளர்த்திகவுண்டம்.

எழிலரசியும், வளர்த்திகவுண்டமும் இந்த வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் பெரும்பாலும் இவர்கள் தனிமையிலேயே இருந்திருக்கிறார்கள்.

தள்ளாட வைக்கும் முதுமையின் காரணமாக, வேலைக்கு போக முடியாமலிருந்த வளர்த்திகவுண்டம் மனைவியை மட்டும் வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்த சூழலில் தான் அவரது சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.

வளர்த்திகவுண்டத்தின் மனைவி எழிலரசி திடீரென காணாமல் போயிருப்பது போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது. உடனே தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், எழிலரசியை கண்டுபிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். போலீசாரின் சந்தேகம் துளியும் வீண்போகவில்லை. வளர்த்திகவுண்டத்தை கொலை செய்திருப்பது வேரு யாருமல்ல அவரது மனைவி எழிலரசி.

எழிலரசி வளர்த்திகவுண்டத்தை திருமணம் செய்தது குடும்பம் நடத்துவதற்கு அல்ல. அவரது சொத்துக்களை அபகரிக்க.

ஆம்... சொந்த ஊரில் வளர்த்திகவுண்டத்துக்கு வீடு நிலபுலம் எல்லாம் இருந்திருக்கிறது. 2010 ஆண்டே அந்த சொத்துக்களை எல்லாம் தன் பேரில் மாற்றி கொண்டிருக்கிறார் எழிலரசி. அடுத்ததாக ஆலத்தூரை சேர்ந்த ஒருவருடன் தகாத உறவில் இருந்திருக்கிறார்.

இந்த ரகசிய காதல் விவகாரம் ஒருகட்டத்தில் வளர்த்திகவுண்டத்தின் காதுக்கு வர இருவருக்கும் தகராறு வெடித்திருக்கிறது. மனைவியை கடுமையான கண்டித்திருக்கிறார் வளர்த்திகவுண்டம். இதனால் எழிலரசிக்கு கணவர் மீது ஆத்திரம் உண்டாகியிருக்கிறது. நாளடைவில் அந்த ஆத்திரம் கொலை வெறியாகவும் மாறியிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சினை வெடித்திருக்கிறது. கோவம் தலைக்கேற எழிலரசி கணவனை கொடூரமாக தாக்கியிருக்கிறார். பேச்சு மூச்சி இன்றி கிடந்த வளர்த்திகவுண்டத்தை உயிருடன் பிளாஸ்டிக் கவரில் சுருட்டி டரம்மில் அடைத்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார்.

மூச்சு திணறி வளர்த்திகவுண்டம் டிரம்மிலேயே துடிதுடித்து இறந்து போயிருக்கிறார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்