தற்போதைய செய்திகள்

பைக்கை திருடி காரில் தப்பிய கும்பல்.. TVS 50 பைக்கில் சேஸ் செய்து பிடித்த நபர்.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, காரில் வந்து இருசக்கர வாகனத்தை திருடிய கும்பலை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோலாறு பகுதியை சேர்ந்த உமர், முஜாகிர் உள்ளிட்ட 6 பேர், நாட்றம்பள்ளி பகுதிக்கு வந்துள்ளனர். நாட்றம்பள்ளி அருகே நாயனசெருவு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது இருசக்கர வாகனத்தை, காரில் வந்த மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிடவே, பொதுமக்கள் விரட்டிச் சென்று, காரையும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு, அந்த 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில், கொள்ளைக் கும்பல் கொண்டு வந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, அதில் டம்மி துப்பாக்கி, கத்தி மற்றும் 8 செல்போன்கள் இருந்ததும், கர்நாடகாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. ஆயுதங்களுடன் வந்துள்ளதால், அவர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா