தற்போதைய செய்திகள்

உயிர் பிரியும் கடைசி நொடியிலும் 50 உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்

தந்தி டிவி

உயிர் பிரியும் கடைசி நொடியிலும் 50 உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழந்து பயணிகளைக் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஜெயங்கொண்டத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். பேருந்தை புருஷோத்தமன் என்பவர் இயக்கிய நிலையில், ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இருப்பினும் வலியை பொருட்படுத்தாத அவர், பேருந்து நிலையத்தில் பயணிகள் இறங்கும் வரை நெஞ்சு வலியை பொறுத்துக்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்து அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், புருஷோத்தமனின் உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Madurai | Accident | மதுரையில் கோர சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூர பலி

K Rajan | Death | "இப்படி ஒரு மறைவ நான் எதிர்பார்க்கல" - மனம் கலங்கிய கோடங்கி

K Rajan | ``மனசில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர்..'' | அதிர்ச்சியோடு இயக்குநர் பேரரசு சொன்ன தகவல்

K.rajan``நீண்டகாலம் குடும்பத்தை பிரிந்திருந்தார்..’’ - உயிரை மாய்த்துக்கொண்ட கே.ராஜன்..பகீர் பின்னணி

K.Rajan Death | "கான்ஃபிடன்டான மனுஷன்.. இப்படி ஆயிருச்சே.." - திரைத்துறையை உலுக்கும் கே.ராஜன் மரணம்