தற்போதைய செய்திகள்

அட்டகாசம் செய்த கருப்பன் யானை... சுற்றி வளைத்து பிடித்த கும்கி யானைகள்

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலைப்பகுதியில் வலம் வரும் கருப்பன் யானை, கடந்த ஓராண்டாக வனத்துறைக்கு போக்குகாட்டி வந்தது. இந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமில் இருந்து சின்னத்தம்பி, மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை மகாராஜன்புரம் பகுதியில் கருப்பன் யானை இருந்ததை அறிந்த வனத்துறை, கால்நடை மருத்துவ குழுவினர், அங்கு விரைந்தனர். துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானை சுற்றி வளைக்கப்பட்டது. கருப்பு தோட்டதில் மயக்க நிலையில் இருக்கும் யானையை, லாரியில் ஏற்றிக் கொண்டுசெல்லப்பட்டது. கருப்பன் யானை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்