தற்போதைய செய்திகள்

"டாஸ்மாக் திட்டம் மட்டும் வேகமாக போயிட்டு இருக்கு" முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

தந்தி டிவி

அதிமுகவின் அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டு டாஸ்மாக் விற்பனை மட்டுமே தொடர்ந்து நடைபெறுவதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள சித்துராஜ புரத்தில், நடைபெற்ற அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் விடியல் தருவார் என புதிய வாக்காளர்களும், திமுக வரலாறு தெரியாதவர்களும் வாக்களித்ததாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசுடன் சண்டை, கரப்ஷன், கலெக்‌ஷன் ஆகியவைதான் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்