தற்போதைய செய்திகள்

இன்று தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?

இன்று தமிழக பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தந்தி டிவி
• இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், மகளிருக்கு உரிமை தொகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. • 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். • அதில், பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. • அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. • பட்ஜெட்டில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு அதிக முக்கியத்துவம், • தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழில் பூங்காக்கள், ஐடி பார்க் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. • கடந்த நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 7 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது • தமிழக அரசுக்கு உள்ள கடன் அளவு, மேலும் வாங்க திட்டமிடப்பட்ட கடன் அளவு போன்ற அம்சங்கள் வெளியிடப்பட உள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு