இந்தியா உடனான வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள, இலங்கை அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. டாலர் நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் இந்திய வங்கிகள் கணக்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரஷ்யா மற்றும் மொரீஷியஸ் நாடுகளிலும் கணக்கை திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வர்த்தகத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த தஜிகிஸ்தான், கியூபா, லக்ஸம்பர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.