தற்போதைய செய்திகள்

முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா போட்ட முதல் ட்வீட்

தந்தி டிவி

கர்நாடக தேர்தலில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்றும் வகையில், கட்சியினர் ஒரு குடும்பமாக பணியாற்ற வேண்டுமென, முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், சித்தராமையா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கன்னட மக்களின் நலனுக்காக தங்கள் கைகள் எப்போதும் இணைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். மக்களிடையே வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதோடு, அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்