தற்போதைய செய்திகள்

வனப்பகுதியில் திமுக நிர்வாகியின் மகள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

தந்தி டிவி

தர்மபுரி அருகே, இளம்பெண் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தருமபுரி புவனேஸ்வரன் பழைய ரயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான ஹர்ஷா. இவரது தந்தை தருமபுரி 8-வது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார். மருத்துவ மருந்து பிரிவில் பட்டப்படிப்பு முடித்து, ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஹர்ஷா பணியாற்றி வந்தார். தருமபுரி கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில், கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுடன் ஹர்ஷா சடலமாக இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கொலைக்கான காரணம் கறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்