தற்போதைய செய்திகள்

"ஷீரடி சாய்பாபா கோயில்"- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்

தந்தி டிவி

மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்று வெளியான தகவலை, கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள பிரசித்திபெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் நாள்தோறும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்கான பாதுகாப்பை இனி மத்திய தொழிலக பாதுகாப்பு படை மேற்கொளும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. சாய்பாபா டெம்பிள் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என செய்தி வெளியானது. இதனை கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கோயில் வழக்கம்போல் திறந்திருக்கும் என்றும், பிரசாதக்கூடம், பக்தர்கள் தங்குமிடம், மருத்துவமனை என அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."