தற்போதைய செய்திகள்

"நிலைமை மோசமா இருக்கு.." - "Code Red" அபாயத்தில் பூமி - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

தந்தி டிவி

கால நிலை மாற்றம் காரணமாக பூமி இப்போது "சிவப்பு குறியீட்டில்" உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதகுலம் காலநிலை மாற்ற அபாயத்தின் உச்சத்தை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்கொள்ளும் அளவிற்கு பூமியின் நிலை மோசமடைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள், மக்கள் மற்றும் உலகத் தலைவர்கள் இந்த சிறப்பு அறிக்கையைப் படித்து, காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு வெளியான "உலக விஞ்ஞானிகளின் மனிதகுலத்திற்கான எச்சரிக்கை", மற்றும் 2017ல் புதுப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையின் தொடர்ச்சியே தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாகும். இது 184 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Census | ஜூலை 17ல் தமிழகத்தில் முதற்கட்டம் - வெளியானது தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்