தற்போதைய செய்திகள்

சொத்து வரி செலுத்தாத அரசு குடியிருப்புகள்... குடிநீர் இணைப்பு துண்டிப்பு - அதிகாரிகள் அதிரடி

தந்தி டிவி

சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம், சொத்து வரி, சேவை கட்டணம் செலுத்தாத அரசு குடியிருப்புகளுக்கு எதிராக நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான அலுவலர்கள் குடியிருப்புக்கு குடிநீர் கட்டணமாக 7.59 லட்சமும், குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையம் சொத்து வழியாக சுமார் 53.53 லட்சமும், செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதே போல், சிட்கோ தொழிற்பேட்டை சார்பில் 23.39 லட்சமும், மேற்பார்வை மின் பணிமனை வட்டம் 12.10 லட்சம் ரூபாயும் நகராட்சிக்கு வரி பாக்கி உள்ளது

. இந்த நிறுவனங்களுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு கட்டணமும் நகராட்சிக்கு செலுத்தவில்லை.

இதனை அடுத்து குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்