தற்போதைய செய்திகள்

பக்கத்து வீட்டு பெண் மீது ஆசை... கணவனுக்கு உதவி செய்த மனைவி... கஞ்சா போதையில் பகிர் சம்பவம்!

தந்தி டிவி

ஆற்காடு அருகே உள்ள பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவனை பிரிந்து, 17 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கஞ்சா வியாபாரியான பாஸ்கர் என்பவர், அந்தப் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து வந்துள்ளார். இதனைக் கவனித்த பாஸ்கரனின் மனைவி துர்கா, கஞ்சா போதையில் இருந்த தனது கணவரை, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளார். பின்னர், தாய் மற்றும் 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை பாஸ்கர் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் வீடியோவை காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பாஸ்கர் மற்றும் இதற்கு திட்டம் வகுத்து கொடுத்த அவரது மனைவி துர்காவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM