தற்போதைய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த் | Rajini Kanth | Punith Rajkumar

தந்தி டிவி

கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாக ரஜினிகாந்த் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது கர்நாடக உதய தினமான நவம்பர் ஒன்றாம் தேதி பெங்களூர் விதான் சவுதாவில் நடைபெறும் அரசு விழாவின்போது அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படும் என முதல்வர் வசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். இந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடக முதல்வருக்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடித‌த்தில், இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், கட்டாயம் இந்த விழாவில் பங்கேற்பேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax