தற்போதைய செய்திகள்

ரக்கூன் நாய்களிலிருந்து தோன்றியதா கொரோனா வைரஸ்? - வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு

தந்தி டிவி
• 2019 இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிவிட்டது. • வைரஸ் சீனாவின் உகான் வனவிலங்குகள் இறைச்சி சந்தையில் இருந்து பரவியிருக்கிறது எனக் கூறப்பட்டாலும், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த விலங்கிலிருந்து பரவியது என்பது உறுதியாக செய்யப்படவில்லை. • வவ்வால்களில் இருந்து பரவியதாக கூறப்பட்டாலும் இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்கிறது. • இப்போது அரிசோனா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், உகான் வனவிலங்குகள் சந்தையில் ரக்கூன் நாய்களிலிருந்து வைரஸ் வெளிப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • சர்வதேச விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில், உகான் சந்தைப் பகுதியில் விலங்குகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், ரக்கூன் நாய்களில் காணப்பட்ட மரபணு மாதிரிகள், மனிதர்களிடம் பரவிய வைரசின் மரபணு மாதிரிகளுடன் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்