தற்போதைய செய்திகள்

நல்லா ஹைட் வெயிட்டா சுடிதார் போட்டு..லேடிஸ் செருப்பை குறி வைத்து தூக்கும் நபர்.. "ஆமா நீ.. திருடனா? திருடியா?"

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே சுடிதார் அணிந்த மர்ம நபர், மதில் சுவர் மீது ஏறி குதித்து, பெண்களின் செருப்பை மட்டும் குறிவைத்து திருடி வருகின்றார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வீடுகளில், பெண்களின் செருப்பு தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அதில், சுடிதார் அணிந்த நபர் ஒருவர், மதில் சுவர் மீது ஏறி குதித்து, பெண்கள் அணியும் செருப்பை மட்டும் குறிவைத்து திருடியது தெரியவந்தது. இது குறித்து குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, சுடிதார் அணிந்து, சுற்றித் திரியும் விநோத நபர் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்