தற்போதைய செய்திகள்

'வலிமை' பட பாணியில் பிளான்.. 'மாஸ்டர்' பட பாணியில் எஸ்கேப் - சென்னையை பதறவிட்ட 3 சிறுவர்கள்

தந்தி டிவி

சென்னையில் வலிமை பட பாணியில் இருசக்கர வாகனங்களை திருடி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரோம்பேட்டை பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமாக வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மூவரும் 17 வயது சிறார்கள் என்பதும், அவர்கள் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. ஜிஎஸ்டி சாலையில் அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருட்டி பைக்கில் சென்று செயின் பறித்தால் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்ற தைரியத்தில் வலிமை படத்தில் வருவது போலவே இவர்கள் குற்றச் சம்பவங்களை அரங்கேற்றியது போலீசாரையே அதிர வைத்துள்ளது. மேலும் மாஸ்டர் பட பாணியில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் குற்றவாளிகளாக பிடிபட்டதும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 3 இரு சக்கர வாகனங்கள், 8 கிராம் மதிப்புடைய செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?