தற்போதைய செய்திகள்

"டிசம்பர் 7ல் கூடுகிறது நாடாளுமன்றம்"

தந்தி டிவி

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர், வரும் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடர், டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

17 அமர்வுகள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு ஆக்கபூர்வமான விவாதங்களை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் மாதம் மூன்றாவது வாரம் தொடங்கி, 20 நாள்கள் வரை நடைபெறும்.

இந்த முறை, குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், டிசம்பர் முதல் வாரத்தில் கூட்டத் தொடர் தொடங்கப்பட உள்ளது.

புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தில், சில பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்